ALL FMs

தமிழ் நண்பர்கள் அரட்டை அறை

தமிழ் நண்பர்களுக்கான அரட்டை அறை. செக்ஸ் பற்றி பேச வேண்டாம். உண்மையான நட்பிற்கு உபயோக படுத்தி கொள்ளுங்கள்.

Friends Room

Friends Chat Room

Saturday, April 9, 2011

அப்பா


அன்பென்னும்  அகராதியில்

முதல் சொல்லும் நீ தானோ ...

அறிவை தந்தும்

ஆற்றலை ஈந்தும்
உருகும் உன்னத மெழுகும் நீ தானோ ...

இரும்பையே இதயமாய் கொண்டு

இன்னல்கள் பலகோடி வந்தபோதும்

கலங்கா தூணாய் நின்றவரும் நீ தானோ ...

ஈகையின் அர்த்தம்மாய்
மனித நேயத்தின் கடவுளாய் 

வாழ்ந்தவரும் நீ தானோ ...

ஆசானாய், அன்னையாய் அன்பான அண்ணனாய் 

எண்ணற்ற அவதாரம் எனக்காக நீ எடுத்தாய்
என் நிலையில் மேலோங்க 

தேய்பிறையாய் நீ தேய்ந்தாய் ...

உன் நிழலிலே வளர்ந்த ஒரு மரமாய்
துணிவோடும் துடிப்போடும் 
நான் இருக்க....
துணையாக நீ வரவேண்டும் 
வேடிக்கை பார்க்கும் வேற்றவனாய் அல்ல..
வாழ்க்கையை வழிநடத்தும் 
பிரபஞ்சத்தின் ஒளியாய் ....

No comments:

Post a Comment